இலங்கையில் பொலிஸாரை கொடூரமாக தாக்கிய பெண்கள் – இருவர் வைத்தியசாலையில்

0

கஹட்டகஸ்திஹிலிய – துருக்குராகம பகுதியில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொலிஸாரை தாக்கிய 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஆண்கள் மூவரும் பெண்கள் ஆறு ​பேரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அனுராதபுரம் பிராந்திய போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய கஹட்டகஸ்திஹிலிய – துருக்குராகம பகுதியில் நேற்று (06) மதியம் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் 27 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேகநபர் கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்பை வௌிப்படுத்திய சிலர் பொலிஸ் அதிகாரிகளை தாக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்காகிய பொலிஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் ஏனைய சந்தேகநபர்கள் இன்று (07) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here