இலங்கையில் பொலிஸாருக்கு போலி தகவல் வழங்கிய பெண் கைது

0

இலங்கையில் பொலிஸ் தலைமையகத்தின் 119 என்ற அவசர தகவல் பிரிவுக்கு போலி தகவலை வழங்கியமை தொடர்பில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டில் இடம்பெறும் குற்றச் செயற்பாடுகள் மற்றும் தங்களுக்கு ஏற்படும் நெருக்கடிகள் தொடர்பில் பொது மக்கள் உடனே பொலிஸாருக்கு அறிவிப்பதற்காகவே 119, 118 மற்றும் 1997 என்ற தொலைபேசி அழைப்புகளை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு 119 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பொன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

தங்கொட்டுவ பொலிஸ் நிலையத்திற்கு வாகனத்தினால் வந்துள்ள சிலர் வெடிப்பொருட்களை கொண்டு அனர்த்தமொன்றை மேற்கொள்ள தயாராகிக் கொண்டிருப்பதாக அந்த அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , அந்த அழைப்பில் எந்த நம்பகத்தன்மையும் இல்லை என்பதை கண்டறிந்திருந்தனர்.

பின்னர் அழைப்பினை ஏற்படுத்தியவர் யார் என்பதை கண்டறிவதற்காக விசாரணைகளையும் ஆரம்பித்திருந்தனர்.

இந்நிலையில் இவ்வாறு போலியான தகவலை வழங்கியமை தொடர்பில் தங்கொட்டுவ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய யுவதியொருவரை கைது செய்திருந்ததுடன் , சந்தேக நபரான யுவதி அவருடைய 28 வயதுடைய சகோதரியின் தொலைபேசியை பயன்படுத்தியே இவ்வாறு போலி தகவலை வழங்கியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

தங்கொட்டுவ பொலிஸார் சந்தேக நபர்களான யுவதிகள் இருவரையும் கைது செய்து , மாரவில நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர். இதன்போது நீதிவான் தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட யுவதியை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here