இலங்கையில் பைசர் தடுப்பூசி பயன்படுத்துவது அபாயம் − நிபுணர்கள் விடுக்கும் எச்சரிக்கை

0

இலங்கையில் பைசர் தடுப்பூசி செலுத்துவதன் ஊடாக, தேவையற்ற பாதிப்புக்களை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினரும், வைரஸ் தொடர்பான விசேட நிபுணருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவிக்கின்றார்.

பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பைசர் தடுப்பூசியின் செயற்பாடு தொடர்பில் விஞ்ஞான ரீதியில் சந்தேகம் நிலவுவதாக அவர் கூறுகின்றார்.

பைசர் தடுப்பூசியானது, கொவிட் பரவலுக்கு பின்னரான காலத்திலேயே முதல் தடவையாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அதனாலேயே, தனக்கு இந்த தடுப்பூசி குறித்து சந்தேகம் நிலவுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு பைசர் தடுப்பூசி இறக்குமதியை இயலுமானளவு குறைத்துக்கொள்ளுமாறும், மாற்று தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அவர், சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here