இலங்கையில் பேஸ்புக் விருந்து சுற்றவளைப்பு – பலர் கைது

0

பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசார நிகழ்வொன்றைச் சுற்றிவளைத்த வெலிகம பொலிஸார் போதைப்பொருளுடன் 12 சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.

குறித்த விருந்துபசார நிகழ்வு பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு வெலிகம பொலிஸாரினால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மிதிகமவில் உள்ள உல்லாச விடுதியில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில், குறித்த சந்தேக நபர்கள் கொகேய்ன், ஐஸ் மற்றும் கேரள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை வைத்திருந்ததாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 30 மற்றும் 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் நேற்றைய தினம் மாத்தறை நீதிவான் நீதிமன்றில் முன் னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் மேலதிக விசாரணைக்காகத் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here