இலங்கையில் பேருந்து சேவைகள் வழமைபோன்று ஆரம்பிக்கப்படுறதா?

0

நடமாட்டத்தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட பேருந்து சேவைகளே முன்னெடுக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

அடுத்த வாரம் முதல் வழமை போன்று பேருந்து சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சுமார் 6 ஆயிரம் பேருந்துகளை அடுத்த வாரம் முதல் சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வழமைபோன்று பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்தார்.

மாகாணங்களுக்குள் தேவையான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்படுகின்றதா? என்பது தொடர்பில் ஆராய்வதற்காக விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here