இலங்கையில் பேரவலம் அரசு இனியாவது சிந்திக்குமா…?

0

கண்டியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்த ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

மயங்கி வீழ்ந்தவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது அவர் உயிரிழந்திருந்ததாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

வத்தேகம – உடதலவின்ன பகுதியை சேர்ந்த 71 வயதுடையவர் உயிரிழந்துள்ளார்.

எரிபொருள் பற்றாக்குறையினால் பொதுமக்கள் எதிர்நோக்கியுள்ள துன்பம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது.
எனினும், நெருக்கடிக்கான தீர்வு இதுவரை பெற்றுக்கொடுக்கப்படவில்லை.

நாடு முழுவதும் எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here