இலங்கையில் பெரசிட்டமோல் மாத்திரைக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்!

0

500 மில்லிகிராம் எடையுள்ள பெரசிட்டமோல் மாத்திரையின் அதிகபட்ச சில்லறை விலை 2 ரூபா 30 சதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 28ஆம் திகதி முதல் இந்த கட்டுப்பாட்டு விலை அமுலாகும் என வர்த்தமானி அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் எதிர்வரும் 4 வாரங்களுக்கு பின்னர் பெருமளவான மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என இலங்கை ஒளடத ஒன்றியத்தின் தலைவர் ஏ.ஜே.பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக மருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கான நாணய கடிதங்கள் விடுவிக்கப்படாமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாடு முழுவதும் உள்ள மருந்தகங்களில் பெரசிட்டமோல் உள்ளிட்ட சில மருந்துகளுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here