இலங்கையில் பெண்களை தொழில்களில் இணைத்துக்கொள்ள அறிமுகமாகும் நடைமுறை!

0

இலங்கையில் பெண்களை வீட்டு வேலைக்கு அமர்த்தல் மற்றும் வேறு தொழில்களில் இணைக்துக்கொள்ளும் போது பிரதேச செயலாளரின் அனுமதியை பெற்றுக்கொள்ளவதை கட்டாயமாக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த 16 வயதான சிறுமி ஒருவர் இறந்த சம்பவத்தை தொடர்ந்து சிறுவர்களை வேலைக்கு இணைத்துக்கொள்ளுதல் தொடர்பாக சமூகத்தில் பெரிதும் பேசப்பட்டுவருகிறது.

இந்த விடயங்களை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் இதுதொடர்பாக புதிய சட்டம் இயற்றப்படும் என்று மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த தெரிவித்தார்.

அத்துடன் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here