இலங்கையில் பெண்களின் வேலை நேரத்தில் மாற்றம்

0

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் பெண்கள் இரவு நேரங்களில் பணியாற்றும் வகையில் கடை மற்றும் அலுவலக சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பான பிரேரணையை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார சமர்ப்பித்துள்ளார்.

அதன்மூலம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களில் பெண்கள் வெளிநாடுகளின் நேர மண்டலத்திற்கு ஏற்ப வேலை செய்யும் வகையில் கடை மற்றும் அலுவலகச் சட்டம் திருத்தப்படும்.

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் காலை 06.00 மணிக்கு முன்பும் மாலை 06.00 மணிக்குப் பின்னும் வேலை செய்ய இந்தத் திருத்தங்கள் அனுமதிக்கும்.

முன்னதாக, 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் விமான நிலைய சேவை மற்றும் ஹோட்டல் போன்ற சில தொழில்களில் இரவு 08.00 மணி வரை மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

பெண்களை இரவில் வேலை செய்வதைத் தடுக்கும் அனைத்து விதிமுறைகளையும் நீக்கி, இலங்கையில் பெண் பணியாளர்களை மேலும் வலுப்படுத்த, தொழிலாளர் அமைச்சர் நம்புகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here