கொவிட் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு காணப்படுகின்ற இயலுமை குறித்து சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சின் கொவிட் 19 தொடர்பான பிரதான இணைப்பு அதிகாரி டொக்டர் அன்வர் ஹம்தானி தெரிவிக்கின்றார்.
பூஸ்டர் தடுப்பூசியை கட்டாயமாக்குவது தொடர்பில், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட அபிவிருத்தி அடைந்த நாடுகள் தற்போது ஆராய்ந்து வருவதாக அவர் கூறுகின்றார்.
இந்த விடயம் தொடர்பில், சுகாதார அமைச்சர், சட்ட மாஅதிபரின் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த சட்ட ஆலோசனைகளின் பிரகாரம், எதிர்காலத்தில் சட்ட வரையறைக்குள் செயற்பட எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவிக்கின்றார். (