இலங்கையில் எதிர்வரும் புத்தாண்டுக்காலத்தில் தலையணைச் சண்டை, கயிறு இழுத்தல் உட்பட்ட பாரம்பரிய விளையாட்டுக்களை தவிர்க்குமாறு அறிவுறுத்ப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் உதவிப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுசி பெரேரா இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
பொதுமக்கள் வீடுகளிலேயே புதுவருடக் கொண்டாட்டங்களை சிறந்தது என தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கும் இதுவே தீர்வாகும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் புதுவருட நிகழ்வுகளை எவரும் ஏற்பாடு செய்தால் அது முழுமையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் வைத்திய கலாநிதி சுசி பெரேரா தெரிவித்துள்ளார்.