இலங்கையில் புதையல் தோண்டிய 9 பேர் கைது…!

0

இலங்கையில் சுற்றுச் சூழல் தொடர்பாக காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளின் போது நேற்று 26 ஆம் திகதி கலேவெல பிரதேசத்தில் புதையல் தோண்டிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுச் சூழலை அழித்து புதையல்களை தோண்டும் சில தரப்பினர் தொடர்பில் காவல்துறைக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதற்கமைய திரப்பனை பிரதேசத்தில் புதையல் தோண்டிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here