இலங்கையில் புகையிரதத்தில் மோதி மூவர் பலி

0

இலங்கையில் மூன்று வேறுப்பட்ட பகுதிகளில் புகையிரத்தில் மோதுண்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்போது புஸ்ஸ – கிங்தொட்ட புகையிரத வீதியில் 60 வயதுடைய நபரொருவர் புகையிரதத்துடன் மோதி மரணித்துள்ளார்.

புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரத்தில் மோதி 71 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தல்ப்பே – மிஹிரிபெத்த பகுதியில் பெண்ணொருவர் புகையிரத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் , தற்போது புகையிரதத்தில் மோதி உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

அதனால் புகையிரத பாதைகளை பயன்படுத்தும் மக்கள் இது தொடர்பில் மிகவும் கவனத்துடன் செயற்பட வேண்டும்.

இதேவேளை புதுவருட பிறப்பு விடுமுறைகாலங்களில் வீடுகளுக்குச் சென்றிருந்தவர்கள் , தற்போது பணிக்காக வந்துக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு விசேட போக்குவரத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதன்போது அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்ட அனைத்து வீதிகளிலும் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

இதன்போது அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் சாரதிகள் மிகவும் கவனத்துடன் பயணிக்க வேண்டும்.

மழையுடனான காலநிலை காணப்படுவதால் மட்டுப்படுத்தப்பட்ட வேகத்தில் செல்வதுடன் , வீதி ஒழுங்கு சட்டவிதிகளையும் பின்பற்ற வேண்டும்.

மேலும் மதுபாபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here