இலங்கையில் பிள்ளைகளால் தாக்கப்பட்டும் பெற்றோர்….! அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்

0

இலங்கையில் கடந்த சில மாதங்களாக பிள்ளைகளால் தாக்கப்பட்டு பெற்றோர் காயமடைதல் அல்லது உயிரிழத்தல் போன்ற சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் கடந்த 11 ஆம் திகதி கிளிநொச்சி – கனகபுரம் பிரதேசத்தில் 20 வயது மகனால் 53 வயதுடைய தந்தை தாக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு மகனால் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தந்தை சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபர் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன.

இவ்வாறான சம்பவங்களை தவிர்ப்பதற்கான விசாரணைகள் பொலிஸாரால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

எனினும் இதற்கு சகல தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியமாகும் என பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here