இலங்கையில் பிரபல விகாரைக்கு அருகிலிருந்து கைக்குண்டு மீட்பு!

0

பொரலஸ்கமுவ, பெல்லன்வில ரஜமஹா விகாரையின் மதிலுக்கு அருகிலிருந்து இன்று (13) கைக்குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

விகாரையின் பணியாளர்கள் இருவரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய, குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட கைக்குண்டை செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகக் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகக் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here