இலங்கையில் பால் மாவின் விலை சடுதியாக உயர்வு

0

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலை 1345 ரூபாவிலிருந்து 1945 ரூபாவாகவும், 400 கிராம் பொதியின் விலை 540 ரூபாவிலிருந்து 800 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.

நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவிற்கு கடந்த 7 ஆம் திகதி வழங்கிய அறிவித்தலின் படி பால் மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளது.

உலக சந்தையில் ஒரு கிலோ பால் மாவின் விலை 2.80 அமெரிக்க டொலர்களில் இருந்து 5.30 அமெரிக்க டொலர்களாகவும், டொலர் ஒன்றின் பெறுமதி அதிகரிப்பாலும் இவ்வாறு விலை அதிகரிக்கப்படவுள்ளது.

இதையடுத்து, வவுனியாவில் பால் மாவுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக அங்கர், ரத்தி ஆகிய பால் மாவுக்கே அதிக தட்டுப்பாடு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here