இலங்கையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த பெண்கள் கைது

0

இலங்கையில் நீர்கொழும்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட கல்கந்த பகுதியில் ஆயுர்வேத உடற்பிடிப்பு நிலையம் என்ற பெயரில் பாலியல் தொழிலை முன்னெடுத்து வந்த விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு, மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், இந்த விடுதியை நடத்தி வந்த பெண் ஒருவரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் 23, 43, 44 மற்றும் 36 வயதுகளையுடைய கட்டான மற்றும் கட்டுநாயக்க பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்கள் இன்று நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here