பால் தேனீர் மற்றும் உணவு பெக்கெட்டின் விலையை அதிகரிக்க சிற்றூண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் பால் தேனீர் ஒரு கோப்பை மற்றும் உணவு பெக்கெட் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாணின் விலையை அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
450 நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.