இலங்கையில் பாடசாலை மாணவர்களிடையே தீவிரமடையும் கொரோனா தொற்று!

0

இலங்கையில் பாடசாலை மாணவர்களிடையே கொரோனா நோய்த் தொற்று அதிகரித்துள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் குழந்தைகள் மத்தியில் கொரேனா அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக, பாடசாலைகளை மீண்டும் மூட வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்ட அவர், பெரியவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் நோயை வீட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டாம் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, தாங்கள் முன்கூட்டியே அறிவித்த படி, பல மாகாணங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் சிறிது காலம் கழித்து திறக்கப்பட்ட பாடசாலைகளை மூடுவதைத்தான் முதலில் செய்ய வேண்டும் என்றும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டினார்.

கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட அளவை விட அதிகரித்தால், பயணங்கள் மற்றும் பிற கட்டுப்பாடுகளுக்கு மீண்டும் கட்டுப்பாடுகளை விதிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here