பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசிகளை மிக விரைவில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் கிடைக்கவுள்ள 4 இலட்சத்துக்கும் அதிகமான பைசர் தடுப்பூசிகளை 12 முதல் 18 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்குச் செலுத்துமாறு நாம் ஜனாதிபதியிடம் கோரிகை விடுத்துள்ளோம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற கொவிட் தடுப்பு செயலணியின் கூட்டத்தில் ஜனாதிபதியிடம் கோரிகை விடுத்துள்ளதாக வைத்தியர் செனல் பெர்னாண்டோ தெரிவித்தார்.
தற்போது பாடசாலை மாணவர்கள் பெரும்பாலா னோர் எந்தக் கற்றல் நடவடிக்கை யிலும் ஈடுபடாமல் வீடுகளில் கடந்த ஒரு வருட காலமாகத் துன்பத்தில் உள்ளனர்.
எங்களின் எதிர்கால சந்ததியினர்களான மாணவர்களுக்கு எங்களால் கல்வி வழங்க முடியவில்லை என்றால் நாடு என்ற வகையில் பிரச்சினைக்குரிய விடயமாகும் என்றும் இதற்கு கொரோனா தொற்று காரணம் என்றால் அதற்குத் தீர்வாக கொரோனா தடுப்பூசியை வழங்கி மாணவர் களை பாடசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பைசர் தடுப்பூசிகளை மாணவர்களுக்கு ஒதுக்குமாறும் அதன் ஊடாக மாணவர் களைப் பாதுகாக்க முடியும் என்றும் உரிய காலத்தில் மாண வர்களின் எதிர்கால சொத்தான கல்வியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.