இலங்கையில் பாடசாலை சிரமதானத்திற்கு அரசியல்வாதிகளை ஈடுபடுத்துமாறு கோரிக்கை!

0

இரத்தினபுரி – எஹெலியகொட பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் அதிபர் ஒருவர் தெஹியோவிட்ட வலயக்கல்வி பணிப்பாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

தரம் 6 இலிருந்து தரம் 13 வரையிலான வகுப்புகளைத் திறப்பதற்குத் தேவையான வசதிகளை அமைத்துக் கொடுக்குமாறு குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்

அத்துடன், பாடசாலைகளைத் திறப்பதற்காகக் காடுகளை அகற்றி, சுத்தம் செய்ய வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

கடந்த காலப்பகுதியில் பாடசாலைகளை மீளத் திறப்பது குறித்து ஆர்வத்துடன் பேசிய அரசியல்வாதிகள், காவல்துறை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உறுப்பினர்களைச் சிரமதானப் பணிகளுக்காகக் களமிறக்குமாறு அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

கற்பித்தலைத் தவிர வேறு எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது என ஆசிரியர்கள் தீர்மானித்துள்ளதால், இந்தத் தீர்மானத்தை அவர் எடுத்ததாகக் குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here