இலங்கையில் பாடசாலை ஒன்றில் பரபரப்பை ஏற்படுத்திய மாணவன்

0

காலி நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் தரம் 7இல் கல்வி பயிலும் 12 வயது மாணவனொருவன், அருகில் உள்ள மகளிர் பாடசாலையொன்றில் கல்வி பயிலும் நான்கு மாணவிகளை பிளேடால் வெட்டி காயப்படுத்தியுள்ளார்.

9,12 மற்றும் 15 வயதுடைய மாணவிகள் நான்கு பேரையே அவர் இவ்வாறு வெட்டி காயப்படுத்தியுள்ளார் எனவும், இதில் ஒரு மாணவி தையல் போடுமளவுக்கு காயமுற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விஞ்ஞான கூட ஆய்வுக்கு பூவொன்றையும் பிளேட் ஒன்றையும் எடுத்து வரும்படி ஆசிரியர் கூறியுள்ளார்.

அதன்படி மாணவர்கள் அவற்றைக் கொண்டு வந்துள்ளனர். விஞ்ஞான கூட ஆய்வுகள் முடிவுற்ற பின்னர் பாடசாலை முடிந்து செல்லும் போது பிளேடால் மாணவிகளை வெட்டி காயப்படுத்த வேண்டுமென மூன்று மாணவர்கள் கூடிப்பேசியுள்ளனர்.

இதன்படி பாடசாலை முடிந்து செல்லும்போது ஏனைய மாணவர்கள் சம்பந்தப்பட்ட மாணவனை தவிர்த்து விட்டுச்சென்றுள்ளனர்.

இந்த மாணவன் மாத்திரம் நான்கு மாணவிகளின் கைகளை பிளேடால் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

12 வயது மாணவன் என்பதால் கராபிட்டிய வைத்தியசாலையில் மனநோய் வைத்தியரிடம் அனுப்பி சான்றிதழ் ஒன்றை பெறவுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here