இலங்கையில் பாடசாலைகள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்!

0

இலங்கையில் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை ஆயிரத்து 170 ஆக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது

நாடு பூராகவும் தற்போது 373 தேசிய பாடசாலைகள் உள்ளன. இதன் பிரகாரம் புதிதாக 797 தேசிய பாடசாலைகள் அமைக்கப்படவுள்ளன.

முதல் வேலைத்திட்டம் எதிர்வரும் 29 ம் திகதி சியம்பலாண்டுவ மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

இதன்போது முதல் கட்டத்தில் 125 பாடசாலைகள், தேசிய பாடசாலைக் கட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன.

இந்த வருடம் நிறைவடைவதற்கு முன்னர் தேசிய பாடசாலைகளின் கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படும் சகல பாடசாலைகளுக்கும் ´இணையத்தளம்´, ´ஸ்மாட்´ வகுப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படுமென்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here