இலங்கையில் பாடசாலைகள் திறப்பது தொடர்பில் கல்வியமைச்சின் தகவல்

0

இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்புக்கள் அற்ற பகுதிகளில் பாடசாலைகளை திறக்குமாறு பல்வேறு தரப்பினராலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை சுகாதார பாதுகாப்பு முறைக்கமையவே மீண்டும் திறக்க வேண்டும்.

பாடசாலைகள் மீண்டும் திறப்பதற்கு முன்னர் ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை மீண்டும் திறக்கும் முறை தொடர்பில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here