இலங்கையில் பஸ் கட்டணமும் அதிகரிக்கப்படும்!

0

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டால் பஸ் கட்டணமும் அதிகரிக்கப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

தற்போதைய காலப் பகுதியில் போக்குவரத்துத் துறை பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிக்கும் அவதானம் உள்ளமை யால் எதிர்வரும் நாட்களில் பஸ் கட்டணத் திலும் திருத்தம் மேற்கொள்ள நேரிடும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதுவரையில் நூற்றுக்கு 30 வீதம் மாத்திரமே பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் போக்குவரத் துத் துறைக்கான மேலதிக பாகங்கள் மற்றும் டயர்களின் விலைகள் பாரியளவு அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் எரிபொருள் விலை அதிகரித்தால் பொதுப் போக்குவரத்துத் துறை பாரிய நெருக்கடியைச் சந்திக்கும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here