இலங்கையில் பல பாகங்களுக்கு நீண்ட நேர மின்வெட்டு!

0

இலங்கயில் இன்றைய தினமும் சுழற்சி முறையில் மின்துண்டிப்பை அமுல்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

A முதல் L வரையான வலயங்களில், காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில், 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன், P முதல் W வரையான வலயங்களில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டு மணித்தியாலங்களும், மாலை 5 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்சாரத்தை துண்டிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here