இலங்கையில் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற படுகொலைகள்

0

இலங்கையில் பல்வேறு பிரதேசங்களில் 3 கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

திஸ்ஸமஹாராம சந்தகிரிகம பிரதேசத்தில் நேற்று மாலை 48 வயதுடைய பெண் ஒருவர் தனது காதலனின் தாக்குதலால் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, ஹிதோகம, ஹீனாபோவாகம பிரதேசத்தில் 45 வயதுடைய நபர் ஒருவர் தவறான உறவு காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபர் தொடர்பில் இருந்த பெண்ணின் கணவரே அவரை வெட்டி கொலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் பொத்துஹெர ரத்கல்ல பிரதேசத்தில் 64 வயதுடைய தனது தந்தையின் கழுத்தை நெறித்து 45 வயதுடைய மகன் கொலை செய்துள்ளார்.

குறித்த கொலை சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here