இலங்கையில் பரவும் கொரோனா தொடர்பில் வெளிவந்த தகவல்

0

இலங்கையில் பரவும் கொரோனா வைரஸின் பிறழ்வு பிரித்தானியாவில் பரவிய புதிய வகை கொரோனா வைரஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று (புதனகிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை இயக்குநர் வைத்தியர் சந்திமா ஜீவந்தரா இந்தத் தகவலை வெளியிட்டார்.

கொழும்பு, பொரலஸ்கமுவ மற்றும் குருநாகல் மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதன் காரணமாக இலங்கையில் தற்போது வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here