இலங்கையில் பயனற்று போன ஊரடங்கு!

0

இலங்கையில் மக்களும் வாகனங்களும் வீதிகளில் என்பதனால் ஊரடங்கை நீடிப்பதால் பயனில்லை என பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

“இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை முறையாகச் செயற்படுத்தாமல் நீடிப்பதில் பயனில்லை.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டில் தனிமைப்படுத்தல் ஊர டங்கு அமுல்படுத்தப்படுவது மிகப் பலவீனமான மட்டத்தில் இருக்கின்றது. இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை முறையாகச் செயற்படுத்தாமல் நீடிப்பதில் பயனில்லை. ஊரடங்கின்போது அதிகமான வாகனங்களையும் மக்களையும் வீதிகளில் காண்கின்றோம்.

இவ்வாறான ஊரடங்கால் பயனில்லை. மக்கள் சுதந்திரமாக வீதிகளுக்கு வரும் பலவீனமான ஊரடங்குடன் கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது. அத்தியாவசியத் தேவைகள் இன்றி வீதிகளில் நடமாடுவோ ருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here