இலங்கையில் பயணப் பொதியில் பெண்ணின் சடலம்….! பீதியில் பயணிகள்..!

0

இலங்கையில் கொழும்பு, டேம் வீதியில் பெண் ஒருவரின் சடலத்துடன் பயணப் பொதியொன்று நேற்று மீட்கப்பட்டுள்ளது.

இந்த பயணப் பொதி கொழும்புக்கு பேருந்து மூலம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்த காவல்துறையினர் அதனை கைப்பற்றியுள்ளனர்.

ஹன்வெல்ல பகுதியில் இருந்து 143 ஹன்வெல்ல – கொழும்பு பேருந்தில் சந்தேக நபர் சடலத்தை கொழும்புக்கு கொண்டு வந்துள்ளதாக விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.

சடலத்தின் பிரேத பரிசோதனை இன்று 02 ஆம் திகதி நடத்தப்பட உள்ளது.

இச்சம்பவம் தொடர்பான தகவல்களை வழங்க காவல்துறையினர் பல தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

தொலைபேசி எண்கள் : 071 859 1557 / 011 243 3333

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here