இலங்கையில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் தீர்மானம் மக்கள்கையில்….

0

கொவிட் நோயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. அதனை தொடர்ந்தும் முடிந்தவரை முன்னெடுப்போம் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, கொவிட் நோயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் மிக உயர்ந்த நடவடிக்கைகளை எடுக்கும் போது மக்கள் தங்களின் உயரிய பங்களிப்பை வழங்க வேண்டும். அவர்கள் வழங்குகின்ற பங்களிப்புக்கு அமைய கொவிட் தொற்று பரவல் கட்டுப்படுத்த்தப்படும் என்று அமைச்சர் கூறினார்.

கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் விக்கிரமாரச்சி கண் மருத்துவ நிலையத்துடன் இணைந்த சீஹிஸ் விஷன் நிலையத்தை ( ZEISS VISION CENTER) திறந்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொவிட் கட்டுப்பாட்டிற்கு மக்கள் வழங்கும் பங்களிப்பைப் பொறுத்தே பயணக் கட்டுப்பாடுகள் குறித்து தீர்மானிக்கப்படும். மக்கள் அதற்கு எதிர்மறையாக நடந்துகொண்டால், மீண்டும் பயணக் கட்டுப்பாடு போன்றதொரு சூழலை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதுவரை வெற்றிகரமாக தடுப்பூசிகள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், சுகாதார வழிகாட்டல்களுக்கு ஏற்ப மக்கள் வாழும் சூழலை தயார் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here