இலங்கையில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு கோரிக்கை!

0

எதிர்வரும் ஏப்ரல் புத்தாண்டு காலப்பகுதியில், பயணக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, இந்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் புத்தாண்டு காலப்பகுதியில் கொழும்புக்கு பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இந்த நிலைமையின் கீழ், கொவிட் தொற்றாளர்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இதனால் பயணக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here