இலங்கையில் பயணக்கட்டுப்பாடு 21ஆம் திகதி நீக்கப்பட்டு மீண்டும் அமுலாகும்!

0

இலங்கையில் அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு நீக்கப்படுவதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவ்வாறு நீக்கப்படும் பயணக்கட்டுப்பாடு ஜுன் மாதம் 23ஆம் திகதி இரவு 10 மணி முதல் ஜுன் மாதம் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை அமுல்படுத்தப்படும்.

எனினும் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை தொடர்ந்து தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்வுகள் மற்றும் பிரபல இடங்களில் கூடுவதற்கான தடை தொடர்ந்து அமுலில் இருக்கும் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here