இலங்கையில் பதில் அமைச்சர்களான இராஜாங்க அமைச்சர்கள்!

0

2ஆம் எலிசபெத் மகாராணியின் இறுதி கிரியைகளில் பங்கேற்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியா சென்றுள்ளார்.

இதன்காரணமாக அவரின் கீழ் உள்ள அமைச்சுகளுக்கு, அதன் இராஜாங்க அமைச்சர்களை, பதில் அமைச்சர்களாக நியமித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகபிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வசம் பாதுகாப்பு, நிதி, பொருளாதார உறுதிப்பாடு, தேசியக் கொள்கைகள், தொழில்நுட்பம், மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை, முதலீட்டு மேம்பாடு ஆகிய அமைச்சுகள் உள்ளன.

இந்நிலையில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பிரமித்த பண்டார தென்னகோன்.

நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் இராஜாங்க அமைச்சராக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய

முதலீட்டு இராஜாங்க அமைச்சராக திலும் அமுனுகம

தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சராக கனக ஹேரத்தும், மகளிர், சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சராக கீதா குமாரசிங்கவும் அண்மையில் நியமிக்கப்பட்டனர்.

அதற்கமைய, ஜனாதிபதியின் பிரித்தானிய விஜயத்தையடுத்து, மேற்படி இராஜாங்க அமைச்சர்கள் பதில் அமைச்சர்களாக செயற்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here