இலங்கையில் தமிழ் – சிங்கள புத்தாண்டு காலத்தை முன்னிட்டு மேலதிகமாக இலங்கை போக்குவரத்து துறைக்கு சொந்தமான 1,192 பேருந்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஏப்ரல் 9 முதல் 16 வரையான காலப் பகுதியில் இந்த சேவை முன்னெடுக்கப்படும்.
இந்நிலையில் புத்தாண்டு விடுமுறைகளை இரத்து செய்து, தடையற்ற சேவையை உறுதி செய்வதற்கான முயற்சிகளுக்கு உதவுமாறு இலங்கை போக்குவரத்து சபை அதன் ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை பண்டிகை காலங்களில் போக்குவரத்து குற்றங்களில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம எழுத்துபூர்வமாக பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்
இதேவேளை ஏப்ரல் 9 தொடக்கம் 13, 14 ஆம் திகதிகளில் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
யாழ்ப்பாணம், பதுளை, களுத்துறை தெற்கு, வெயாங்கொட, அனுராதபுரம், குருநாகல், பெலியத்த, மாத்தறை, மருதானை, காலி ஆகிய இடங்களுக்கான ரயில் சேவை இந்தக் காலப்பகுதியில் அமுலில் இருக்கும் என்றும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.