இலங்கையில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் – கட்டுப்பாடுகளுடன் வழங்கப்படும் எரிபொருள்!

0

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை வாகன சாரதிகளுக்கும், மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில், வவுனியாவில் உள்ள எரிபொருள் நிலையங்களை சூழ வாகனங்கள் அணிவகுத்து நிற்பதுடன், அதிகளவு தூரம் வரை எரிபொருள் நிரப்புவதற்கு மக்கள் வரிசை நீடிப்பதையும் அவதானிக்க முடிந்தது.

அத்தோடு எரிபொருளை கொள்வனவு செய்யும் போது ஒவ்வொருவருக்கும் மிகக் குறைந்த அளவிலேயே எரிபொருளை பெற்றுக்கொள்ளுமாறு, எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வழங்கி வருவதாகவும், எரிபொருளுக்காக காத்திருக்கும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதனால் வவுனியா எரிபொருள் நிரப்பும் நிலையங்களை அண்மித்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here