இலங்கையில் நிர்மாணிக்கப்படும் டிஸ்னிலான்ட்….?

0
Standing in front of Sleeping Beauty Castle at Disneyland Park, Mickey Mouse, Minnie Mouse and their pals welcome visitors from all over the world. Combining classic favorites and exciting additions, the Disneyland Resort is an essential part of a Southern California vacation. (Joshua Sudock/Disneyland Resort)

இலங்கையில் டிஸ்னிலான்ட் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலேசியா மற்றும் கொரியா இணைந்து கொரிய நிறுவனமான Korea Cavitation Co இதன் நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக கொரிய நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.

டிஸ்னிலான்ட் அமைப்பதற்காக 150 ஏக்கர் காணி தேவைப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

கொரியா மற்றும் மலேசியா உட்பட நாடுகளிடம் இருந்து 400 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நிதி உதவி இந்த திட்டத்திற்கு பெறுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்ற நிலையில், தடுப்பூசி போடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதனால் இந்தியாவும் முதலீடு செய்யும் என பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த திட்டம் மலேசியாவின் Genting Highlands திட்டத்திற்கு சமமானதாகும்.

சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு 300 அறைகள் கொண்ட ஹோட்டல்களையும் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here