இலங்கையில் நாள் ஒன்றுக்கு 25 சிறுவர் துஷ்பிரயோகங்கள்!

0

இலங்கையில் நாளாந்தம் 25 சிறுவர்கள் பல்வேறு வகையிலான துஷ் பிரயோகங்களுக்கு உள்ளாக்கப் படுவதாக ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

180 நாட்களில் 4743 சிறுவர்கள் துஷ்பிரயோகத்துக் குள்ளாவது என்பது நாளாந்தம் 25க்கு மேற்பட்ட சிறுவர்கள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப் படுவதாகவும் அதன்படி, ஒரு மணி நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும் பேருவளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூன் 30ஆம் திகதி வரையிலான ஆறு மாதங்களில், அதாவது 180 நாட்களில் நாட்டில் 4743 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதனை ஆராய்ந்த போது பல்வேறு விபரங்கள் வெளியாகியுள்ளன. துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகும் சிறுவர்களில் 21 சதவீதம் பேர் ஐந்து வயதுக்குட் பட்டவர்கள்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் 30ஆம் திகதி வரையிலான ஆறு மாத காலப்பகுதியில், 4743 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன் 4900க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நண்பர்களே, இந்தச் செய்தியை ஆராய்ந்து பார்த்தால், பிரதான மூன்று முக்கிய விஷயங்கள் வெளிப்படுகின்றன.

சிறுவர் துஷ்பிரயோகத்தில் நூற்றுக்கு 21 வீத சிறுவர்கள் 5 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

17 சதவீத சிறுவர்கள் 5 முதல் 10 வயதுக்குட்பட்டவர்கள். 38 சதவீத சிறுவர்கள் 11 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள். அதாவது 15 வயதிற்குட்பட்ட 75 சதவீத சிறுவர்கள் இந்த நிலைக்கு ஆளாகின்றனர்.

180 நாட்கள் அல்லது ஆறு மாதங்களில் 4743 முறைகேடுகள் நடக்கும் போது, ​​ஒரு நாளைக்கு 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப் படுகின்றனர்.
இந்தச் சிறுவர்கள் அவர்களின் தந்தை, தாய்மார்கள், மதகுருமார்கள், தாத்தாக்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களால் கூட துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here