இலங்கையில் நாளாந்தம் நான்கு மணிநேர மின்வெட்டு?

0

மார்ச் மாதத்திற்குள் இலங்கை அமெரிக்க டொலரை கடனாகப் பெற தவறினால், நாளாந்தம் சுமார் 4 மணித்தியாலங்கள் மின்வெட்டு ஏற்பட வாய்ப்புள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் தேவையான தியாகங்களை செய்வதற்கு நாடு தயாராக இருக்க வேண்டும் எனவும், அரசியல்வாதிகள் முன்னுதாரணமாக தியாகங்களைச் செய்து வழிவகுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

குறைந்த பட்சம் ஏப்ரல் மாதம் பருவமழை தொடங்கும் வரையில் தற்போதுள்ள வரையறுக்கப்பட்ட வெளிநாட்டு கையிருப்பில் எரிபொருளை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மழைக்காலம் வரை நாட்டில் எரிபொருளை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும்.

24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கான இந்த முயற்சியின் அடிப்படையில், பாரிய கடனைப் பெறாவிட்டால் மார்ச் மாதத்திற்குள் சுமார் 04 மணி நேர நாளாந்த மின்வெட்டை அமல்படுத்த நேரிடும்.

நான்கு மணி நேர மின்வெட்டுக்கு செல்வதை விட, இப்போதிருந்தே ஒன்றரை மணி நேர மின்வெட்டை அமல்படுத்துவது நல்லது அல்லவா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here