இலங்கையில் நவம்பர் முதலாம் திகதி முதல் அமுலாகும் நடைமுறை!

0

இலங்கையில் நவம்பர் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகத்தால் இது வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய , நவம்பர் 16 ஆம் முதல் சாதாரண தர, உயர்தர பிரத்தியேக (Tuition) வகுப்புகளை 50% திறனில் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
1/3 பங்கினருடன் கூட்டங்களை முன்னெடுக்கலாம்.

ஒரு நேரத்தில் உணவு விடுதிகளுக்குள் அதிகபட்சமாக 75 பேரும், வெளியே 100 பேரும் உணவருந்த அனுமதிக்கப்படுவார்கள்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வழங்கிய தொடர் அறிவுறுத்தல்களின்படி, கண்காட்சிகள் மற்றும் மாநாடுகள் நவம்பர் முதலாம் திகதி முதல் அனுமதிக்கப்படும்.

திருமணங்கள், இறுதிச் சடங்குகள் மற்றும் மதச் சடங்குகள் போன்றவைகளில் முன்னர் அறிவிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு அமையவே செயற்பட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here