இலங்கையில் தீவிரவாத தாக்குதல் இடம்பெறலாம் என எச்சரிக்கை! விசாரணைகள் ஆரம்பம்

0

இன்னொரு தீவிரவாத தாக்குதல் எவ்வேளையிலும் இடம்பெறலாம் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளமை குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

குரானின் சட்டங்களை அடிப்படையாக கொண்டதே ஐஎஸ் அமைப்பு என அவர் தெரிவித்துள்ளார்.

ஞானசாரர் இந்த தகவலை பகிரங்கப்படுத்தியமைக்காக நாங்கள் அவருக்கு நன்றி தெரிவிக்கின்றோம் என குறிப்பிட்டுள்ள அமைச்சர் ஐஎஸ் கொள்கை உயிர்ப்புடன் இருக்கும்வரை இலங்கையில் தீவிரவாத தாக்குதல் இடம்பெறலாம் என்றே பௌத்தமதகுரு தெரிவித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்தகொள்கையை பின்பற்றும் எந்த இளைஞனும் எந்தவேளையிலும் தாக்குதல் நடத்தலாம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வஹாபிசம் என்பது குரானை அடிப்படையாக கொண்டது,அது சொர்க்கத்திற்கு செல்லவேண்டும் என்றால் இஸ்லாமிய மதத்திற்காக தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என தெரிவிக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் வஹாபிசத்தை பரப்பியமைக்காக சில இளைஞர்களை கைதுசெய்த வேளை அதற்கு எதிராக குரல்கொடுத்தவர் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here