இலங்கையில் தீவிரமடையும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்றும் உச்சம்!

0

இலங்கையில் கொரோனா தொற்றால் நேற்று மாத்திரம் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து நாட்டில் கொரோனா மரண எண்ணிக்கை 16ஆயிரத்து 574ஆக உயர்ந்துள்ளது.

இறந்தவர்களில் பெண் ஒருவரும் 7 ஆண்களும் அடங்குகின்றனர்.

நாட்டில் தினசரி புதிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இன்று மேலும் 122 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக  சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் நாட்டில் இதுவரை பதிவு செய்யப்பட்ட கொரோனா  தொற்றாளர்களின் எண்ணிக்கை 6,66,086 ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here