இலங்கையில் தீவிரகிசிச்சை பிரிவுகளில் 82 கொரோனா நோயாளிகள்

0

இலங்கையில் அரச மருத்துவமனைகளில் உள்ள தீவிரகிச்சை பிரிவுகளில் 82 கொரோனாவைரஸ் நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என பிரதி பொதுசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

191 கிசிச்சை பிரிவுகளில் கொரோனா நோயாளர்களிற்கான 29530 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன இவற்றில் 26000 படுக்கைகளில் கொரோனா நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக 3287 படுக்கைகளே எஞ்சியுள்ளன என குறிப்பிட்டுள்ள அவர் மேலும் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டால் இந்த எண்ணிக்கை குறைவடையும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் 2800 நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கைக்கு சமாந்திரமாக நோயாளர்கள் கிசிச்சை முடிந்து வெளியேறுவதால் தற்போது மருத்துவமனைகளில் இடத்தட்டுப்பாடு இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் 9000 கட்டில்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here