இலங்கையில் தீடிரென உயிரிழந்த யாசகரிடமிருந்து மீட்கப்பட்ட லட்சக்கணக்கான பணம்!

0

இலங்கையில் திடீரென உயிரிழந்த யாசகரின் பையில் இருந்து லட்ச கணக்கிலான பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை – ஹக்மன பிரதேசத்தில் வசித்து வந்த யாசகர் ஒருவர் உயிரிழந்த நிலையில்,அவரின் காற்சட்டை பையில் இருந்து சுமார் 4 இலட்சம் ரூபாவைப் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

இதன்படி ஹக்மன கொங்கல கிழக்கைச் சேர்ந்த 69 வயதான ஈ.எஸ்.விமலதாச என்பவர் கடந்த 10ஆம் திகதி தான் தங்கியிருந்த வீட்டிற்கு அருகிலுள்ள மலையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார் என் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் அவர் திருமணமாகாதவர் என்பதுடன் பாடல்பாடி யாசகம் பெற்று வந்தார். இறந்தவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கு அருகில் அவர் தங்கியிருந்த சிறிய வீட்டை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அங்கிருந்த கறுப்பு நிறத்தில் இருந்த கால்சட்டைகளை பரிசோதித்த போது பல இரகசிய பொக்கெட்டுகளில் ஏராளமான பணம் இருந்தது. அவற்றில் 500, 5,000, 15000 ரூபாய் என வைக்கப்பட்டிருந்த பணத் தொகைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு காற்சட்டையில் உள்ளும் வெளியிலும் பொக்கட்டுக்கள் தைக்கப்பட்டிருந்ததுடன் அவற்றில் 3 லட்சத்து 84 ஆயிரத்து 867 ரூபா பணம் காணப்பட்டது என்று ஹக்மன பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here