இலங்கையில் திருமண நிகழ்வுகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

0

இலங்கையில் திருமண நிகழ்வுகளை உன்னிப்பாக கண்காணிப்பதற்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நேற்று தீர்மானித்தனர்.

இன்று முதல் இந்த நடவடிக்கை இடம்பெறும் என்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் அதனை 150 பேருக்கும் குறைவானவர்களுடேயே நடத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில பிரதேசங்களில் அந்த ஒழுங்குவிதிகள் மீறப்படுவதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இதனால் திருமண நிகழ்வு கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம் காணப்படுவதாகவும் இராணுவத் தளபதி எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து அறிவித்துள்ள சுகாதார பரிசோதகர்கள் இன்று முதல் திருமண நிகழ்வுகளை உன்னிப்பாக கண்காணிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here