இலங்கையில் திருமணம் உட்பட அனைத்து நிகழ்வுகளையும் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இருவாரங்களுக்கு இந்த தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
மக்கள் ஒன்றுக்கூடும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இரண்டு வாரங்கள் உடனடியாக தடை செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய கொரோனா பரவல் நிலைமையை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.