இலங்கையில் திடீரென அமைக்கப்பட்டுள்ள புதிய சோதனை சாவடிகள்! பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலா?

0

இலங்கையில் பல பகுதிகளில் திடீரென உருவாகியுள்ள சோதனைசாவடிகள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் கேள்விஎழுப்பியுள்ளது.

நாடு ஏதாவது பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின்பண்டார கேள்வி எழுப்பியுள்ளார்.

நான் நாடாளுமன்றத்திற்கு வந்தவேளை என்னை பல இடங்களில் சோதனையிட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் திடீர் என பாதுகாப்பு படையினரின் பிரசன்னம் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கான காரணத்தை அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சியினரின் ஆர்ப்பாட்டங்களை குழப்புவதற்கான முயற்சியே இது என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here