இலங்கையில் தாயின் சடலத்திற்கு உணவூட்டி பாதுகாத்து வந்த மகள்!

0

உயிரிழந்த தனது தாயின் சடலத்தை கடந்த 14 நாட்களுக்கும் மேலாக வீட்டில் வைத்து உணவூட்டி வந்த மகள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

45 வயதான மகள், மனநோயினால் பாதிக்கப்பட்டவர்.

நுகேகொட, தெல்கந்த, பகிரிவத்த, சோம தலகல மாவத்தையில் வசிக்கும் வேரபிட்டிய பகுதியைச் சேர்ந்த பத்மினி பத்திரன என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவது தொடர்பில் பிரதேசவாசிகள் கடந்த 23ஆம் திகதி மாலை மிரிஹான பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர்.

பொலிசார் வீட்டிற்கு சென்று பார்த்தபோது சாப்பாட்டு அறையில் தாயின் உடல் தரையில் கிடந்தது. சடலம் மிகவும் உருகிய நிலையில் காணப்பட்டதாகவும், வீட்டில் கடும் துர்நாற்றம் வீசியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், மனநலம் பாதிக்கப்பட்டுள்ள மகளும் உயிரிழந்த தாய்க்கு அருகில் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அவர் தாயின் சடலத்திற்கு உணவூட்டியுமுள்ளார்.

மனநலம் பாதிக்கப்பட்ட மகளால் இந்த தாய் கொல்லப்பட்டாரா? அல்லது தாய் இயற்கை எய்தினார்களா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here