இலங்கையில் தலை துண்டிக்கப்பட்ட பெண் தொடர்பில் பொலிஸார் தகவல்

0

இலங்கையில் கொழும்பு, டாம் வீதியில் கடந்த முதலாம் திகதி இளம் பெண் ஒருவர் தஸ்ரீலை அற்ற நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டார்.

தலையில்லாத இளம் பெண் குருவிட்ட தெப்பனாவ பிரதேசத்தை சேர்ந்த பெண் என உறுதியாகியுள்ளது.

பெண்ணின் DNA பரிசோதனை முடிவுகளுக்கமைய இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

DNA பரிசோதனை பதில் அரச பகுப்பாய்வாளர் ஜயமந்த என்பவரினால் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் தாய் மற்றும் சகோதரனின் DNA மாதிரிகள் கொலை செய்யப்பட்ட பெண்ணின் மரபணுவுடன் ஒத்துப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய கொலை செய்யப்பட்டவர் குருவிட்ட, தெப்பனாவ பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவர் என்பது உறுதியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here