இலங்கையில் தற்கொலை செய்துக்கொள்ள நடாளுமன்றில் அனுமதி வேண்டி கடிதம் எழுதிய நபர்!

0

தான் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொள்வதற்கு நடாளுமன்றில் அனுமதி வேண்டி BAW.அபேவர்தன என்ற வழக்கறிஞர் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

தான் சேவையாற்றிய காணி சீர்திருத்த ஆணைக்குழுவில் இருந்து எவ்வித காரணமுமின்றி தன்னை பதவி நீக்கியமையால், மக்களின் வரிப்பணத்தில் கல்விகற்ற கடனை செலுத்த முடியாமல் போனதற்காக தான் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொள்ள உள்ளதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

‘கடன் செலுத்த இயலாமையால் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொள்ளல்’ என்ற தொனிப்பொருளின் கீழ் எழுதப்பட்டுள்ள இந்த கடிதம் சபாநாயகர் உள்ளிட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தனது சிறு வயது முதல் உயர்தரம் வரையிலும், பின்னர் பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்றதன் மூலம் தான் இந்நாட்டு மக்களுக்கு பாரியளவில் கடன்பட்டிருப்பதாக வழக்கறிஞர் BAW அபேவர்தன தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here